ஓட்டுநர் & நடத்துனருக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது. கடந்த 19ம் தேதி நடந்த இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet/setc/index.php என்ற இணையதளத்தில் அறியலாம். காலை 9.30 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 10,600 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,600 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக பணியிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

காதலனின் கொடுர செயல்..!! காதலியை 31 துண்டுகளாக வெட்டிய காதலன்..!!

Read Next

6 நாடுகள் விசா இல்லாமல் வரலாம் : சீனா..!! பயணிகள் மகிழ்ச்சி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular