ஓட்டுனரின் உறக்கத்தால் ஒருவர் பலி..!! 5 பேர் படுகாயம்..!! பதற வைக்கும் வீடியோ காட்சி..!!

சாலைகளில் நெடுந்தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் கண்டிப்பாக கவனத்துடனும் விழிப்புடனும் பயணம் செய்ய வேண்டும். ஏனென்றால் வாகன விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றது. நமது சிறு கவனக்குறைவு கூட இந்த வாகன விபத்திற்கு வித்தாகிவிடும்.

வாகனத்தின் ஓட்டுனர் உறக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவற்றை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அலட்சியமே காரணமாய் அமைந்துள்ளது. அந்த வகையில் டெல்லி மும்பை விரைவு சாலையில் நடைபெற்ற ஒரு விபத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அதிர்ச்சியூட்டும் வீடியோவில் கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறது. திடீரென சாலையோரம் சென்று உருண்டு புதற்குள் சிக்கி பின் சாலையில் உருண்டோடி வந்து நிற்கிறது. இந்த விபத்தில் கார் கிட்டத்தட்ட பலமுறை கவிழ்ந்து உருண்டது. காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கு ஓட்டுனரின் உறக்கமே காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வாகனம் எதிர் திசையில் செல்லவில்லை சென்று இருந்தால் கொடூர விபத்து ஏற்பட்டு பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

https://x.com/aditytiwarilive/status/1803315532114145743?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1803315532114145743%7Ctwgr%5E69bb310a5ac81de19040b7f73a759f3f8e7297da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fdelhi-mumbai-expressway-1-died-car-accident

Read Previous

குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திய மத்திய அமைச்சரவை..!! மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

Read Next

விவாகரத்துக்கு பின் பள்ளி நண்பருடன் மீண்டும் காதல்..!! கருத்து வேறுபாடால் கத்தி குத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular