
அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானியான ஓப்பன் ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ஓபன் ஹைமர். கடந்த வாரம் வெளியாகி இருந்தது . கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதில் பகவத்கீதை வசனம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்தியாவில் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு உயர்ந்தது. ஆனால் அந்த வசனம் திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருப்பது தற்போது பேரும் சர்ச்சையாகி இருக்கிறது.
படுக்கையறை காட்சியில் பகவத்கீதை வசனத்தை வைத்து இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்திருப்பதாக சிலர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர் . இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் தணிக்கை குழு மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
திரைப்படத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு” பாலியல் உறவு கொள்ளும்போது ஆணின் மீது ஏறி அமர்ந்து, பெண் ஒருவர் அவரை பகவத் கீதையில் வரும் வசனத்தை உரக்கச் சொல்ல வைக்கிறார். இப்படி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இதை கடுமையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.