
ஓம மோர்க் குழம்பு செய்முறை
தேவையான பொருட்கள் :
* வெண்டைக்காய் 7
* சிறிது புளிப்பு உள்ள மோர் அரை லிட்டர்
* ஓமம் 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 2
* தேங்காய் துருவல் கால் கப்
* வெந்தயம் கால் டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
ஓமம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
அரைத்ததை மோருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
வெண்டைக் காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதை மோர் கலவையுடன் கலந்து, சூடாக்கி, கொதிக்க ஆரம்பித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
சுவையான சத்தான ஓம மோர்க் குழம்பு ரெடி. அதை அப்படியே குடிக்கவும். வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்