ஓரினசேர்கைக்கு எதிராக செயல்பட்ட தந்தை எரித்துக்கொலை..!! மகன் வெறிச்செயல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம் ராய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அயரா கிராமத்தில் சாலையோரம் மர்மமான வகையில் பெட்டி ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெட்டியை சோதனை செய்தபோது அதில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் அவர் அந்தபாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோட் வாலி கிராமத்தில் வசித்து வரும் அனந்த மூர்த்தி என்பவரின் மகன் மோகன் மோகன் லால் சர்மா (வயது 55) என்பது உறுதி செய்யப்பட்டது. இவரை அவரின் சொந்த மகன் அஜித் கூட்டாளிகள் கிருஷ்ணா வர்மா, தீபக், லோகேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓரின செயற்கையாளராக இருந்து வந்த அஜித் ,கிருஷ்ணர்மாவுடன் இயற்கைக்கு மாறான விருப்பத்தில் ஒன்றிணைந்து இருக்கிறார். இந்த விஷயம் மோகன்லாலுக்கு தெரிய வந்தது இதனால் அவர் மகனை கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து தந்தை தனது விருப்பத்திற்கு எதிராக இருப்பதாக கருதிய மகன் அஜித் அவரை கொலை செய்து உடலை பெட்டியில் வைத்து வீசி உள்ளார். தந்தையின் அடையாளத்தை மறைக்க முகம் உட்பட பிற உடல் பாகங்களும் எரிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்..!! திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்..!!

Read Next

புற்று நோயை விரட்டும் பழைய சாதம்..!! ஆய்வில் வெளிவந்த உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular