ஓரினச்சேர்க்கையாளர்..!! முன்னாள் கணவரை விமர்சித்த சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த இரண்டாவது மனைவி.!!

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் சில வருடங்களுக்கு முன் சுசி லீக்ஸ் என்கின்ற விவகாரத்தில் சிக்கி பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து சுசித்ராவின்

கணவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நடிகை அமிர்தா சீனிவாசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சுசித்ரா அண்மையில் பேட்டி ஒன்றில் பல பிரபலங்களை குறித்து மோசமாக விமர்சித்து உள்ளார். மேலும் அவர் “எனது முன்னாள் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்”, எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

அதற்கு கார்த்திக் குமார் “நான் ஓரினச்சேர்க்கையாளராக  இருந்தால் அதனை வெளியே சொல்ல தயங்க மாட்டேன். அதனை மறைத்து வைத்து யாரையும் கஷ்டப்படுத்தவும் மாட்டேன். அதனை வெளியே கூற அசிங்கப்பட மாட்டேன்”, என கூறியுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அவருக்கு ஆதரவாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “வாழ்க்கை என்பது மிகவும் சிறியது விவாதம் செய்யாமல் ம••••  போச்சுன்னு நகர்ந்து விடுங்கள்”  என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/C7Bh7nCv_kj/?utm_source=ig_embed&ig_rid=a2696c95-def0-4498-b9ec-a2fc80571251

Read Previous

கோடை வெயிலால் முதுகில் அரிப்பு ஏற்படுகிறதா கவலைய விடுங்க..!!

Read Next

82.27 மீ எரிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன்..!! தங்கம் வென்று சாதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular