ஓசோ ஆன்மீக தேடலில் ஒரு தெளிவான உன்னதமான நிலையை மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை என்னும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார்..
அதாவது ஆன்மிகம் என்பது உள்ளதை உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.. உதாரணமாக நமது உடலில் ஏதாவது ஒரு நோய் அல்லது ஏதாவது ஒரு வலி ஏற்பட்டால் அதை அப்படியே விழிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. நமக்கு தலைவலி வரும் பொழுது நமது மனம் அதை வெறுப்பான நிலையில் எதிர்க்கும்.. ஆனால் அப்படி செயல்படாமல் வந்த தலைவலியை அப்படியே விழிப்புடன் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் வழி படிப்படியாக குறையும் என்கிறார் ஓஷோ.. இது நடைமுறையில் கடினம் என்றாலும் செயல்படுத்தி பார்த்தால் ஓசோவின் பார்வை நன்கு தெளிவாக புரிய வரும்.. நமது உடலில் ஒரு வலி அல்லது காய்ச்சல் வரும் பொழுது அதை சந்தோஷத்துடன் வெறுப்பாக பார்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாக கவனித்து வந்தால்அந்த வலி படிப்படியாக குறையும் .அந்த காய்ச்சல் படிப்படியாக குறையும். நமக்கு நல்லது நடந்தாலும் அதை அப்படியே அமைதியாக கவனித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .நமக்கு கெட்டது நடந்தாலும் அதை அப்படியே அமைதியாக கவனித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.. எல்லாம் நன்மைக்கே…





