இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (47) என்பவரை கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தேவராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு தேவராஜின் உறவினர்கள் மற்றும் கரிக்கந்தாங்கள் கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்த காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, உதவி காவல் ஆய்வாளர் ரகு மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது குற்றவாளிகளை கண்டிப்பாக கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர்.அதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.