கஞ்சா விற்பனையாளருக்கும் காவல்துறையினரும் கூட்டணியா..? கஞ்சா குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதா..? அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!

கஞ்சா வழக்குகளில் தப்பிக்க துணை போகும் காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது “சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதி ஆதாரங்கள் இல்லை எனக் கூறி போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பாசல் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போதிலும் விசாரணையை காவல்துறையினரே சீர்குலைத்ததாகவும் அவரது விடுதலைக்கு காவல்துறையினரே காரணமாக இருந்ததாகவும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது, பாசல் கைது செய்யப்பட்டு இருமுறையும் அவரிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன் மாதிரிகள் கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. முதன்முறை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 2015 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், இரண்டாம் முறை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்படும்போது காணாமல் போய்விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கஞ்சா வழக்குகளில் ஆறு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை மீறி முதல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்தும் இரண்டாம் வழக்கில் 14 மாதங்கள் கழித்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இத்தகைய குளறுபடிகளால் தான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாசல் வழக்கில் மட்டும்தான் இத்தகைய குளறுபடிகள் நடந்ததாக கூற முடியாது பெரும்பான்மையான கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகள் கடத்தல் வழக்குகளில் காவல்துறையினர் இத்தகைய தவறுகளை செய்ததாக காவல்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கண்ணப்பன் அவர்கள் பல தருணங்களில் கூறியுள்ளார். போதை மருந்து கடத்தல் காரர்களுக்கும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கும் இடையில் கூட்டணி இருப்பதை இது காட்டுகிறது. இந்த கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சனையாய் உருவெடுத்து உள்ளது. எனவே கஞ்சா வணிகத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு கூட எந்த ஒரு பயனும் ஏற்படாததற்கு கஞ்சா வணிகர்களுடன் காவல்துறையினர் உள்ள சிலருடன் கஞ்சா வணிகர்கள் அமைத்துள்ள கூட்டணி தான் காரணம். காவல்துறையினர் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயல் படாத வரை கஞ்சா வணிகத்தை தடுக்க இயலாது.

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா கடத்தல் வழக்குகளில் விசாரணை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் நிலையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அதனிடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்திற்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

Read Previous

தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Read Next

செங்கோட்டையின் தலைமையில் தான் அதிமுக..!! பரபரப்பை ஏற்படுத்திய திமுக அமைச்சர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular