ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு 14 மாதங்களுக்கு முன்னர் குழந்தை காணாமல் போனதாக புகார் ஒன்று வந்துள்ளது. தங்களுடைய 11 மாத பிரித்வி என்ற குழந்தையை காணவில்லை என்று தாய் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை கடத்துபவர்களிடம் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவித்தால் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
பிறகு தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல இடங்களில் குழந்தையைத் தேடி கடத்திய வரை கண்டுபிடித்தனர். அப்போது கடத்தப்பட்ட அந்த குழந்தை கடத்தியவரிடமிருந்து பிரிய மனம் இல்லாமல் கதறி அழுதது. இருந்தாலும் குற்றவாளி இடமிருந்து குழந்தையை மீட்டு போலீசார் தாயிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய நபர் அலிகரிலுள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்து வந்துள்ளார். பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் குழந்தையை கடத்தி மொபைல் போனை பயன்படுத்தாமல் அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வசித்து வந்துள்ளார். இவர் குறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்றபோது குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றார். எட்டு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். இதை சுவாரசிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#राजस्थान के #जयपुर में 14 महीने पहले बच्चे को अगवा किया गया था। पुलिस जब बच्चे को छुड़ाने पहुंची तो बच्चा किडनैपर से चिपटकर रोने लगा और उसे छोड़ने के तैयार नहीं हुआ। यह देखकर किडनैपर भी भावुक हो गया। #viralvedio #Jaipur #Rajasthan pic.twitter.com/Iq8grcLWsI
— KAMLESH BHATT कमलेश भट्ट (@kamleshcbhatt) August 30, 2024