கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1931 ஆக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,737 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,436 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,20,30,63,139 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,18,324 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Read Previous

பிரபல குணச்சித்திர நடிகர் ஈ. ராமதாஸ் காலமானார்…!

Read Next

அண்ணாமலையின் வழக்கம் ஏதாவது கருத்துக்களை அள்ளி வீசுவது தான், அமைச்சர் சேகர் பாபு பேட்டி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular