
ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா இவர் திருச்செந்தூரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.
நீண்டகாலம் ஆகியும் பணத்தை தமிழ்ச்செல்வன் திருப்பி தராததால் பிரபு இது குறித்து ஜீயரத்தில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் கேட்டுள்ளார் அப்போது இவர்களுக்குள் வாய் வார்த்தை முற்றி கைகலப்பாக மாறியதில் தமிழ்ச்செல்வன் அவர் தரப்பைச் சேர்ந்த முரளி ஆகிய இருவரும் பிரபுவை தாக்கியுள்ளனர்.
இதில் தலை மற்றும் கைகளில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரபு ஜீயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய முரளி தமிழ்செல்வன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.