பல லட்சங்கள் முதலீடு செய்து கடையை தொடங்கினார். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரும் பொருட்களை கடன் சொல்லி வாங்கிச் சென்றனர். இப்பொழுது மிச்சம் இருப்பது இதுதான்…
“இல்லை” “முடியாது” “NO” என்று சொல்லாததன் விளைவு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார். நீங்கள் “சரி” என்று சொல்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைக்கிறீர்கள். ஆனால் அது பல நேரங்களில் உங்களுக்கு “இழப்பையே” ஏற்படுத்துகிறது.
எங்கு “சரி”, எங்கு “முடியாது” என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் பணம், அந்தஸ்து எல்லாம் இருக்கும் பொழுது கூட்டம் கூட்டமாக வந்தவர்கள், ஒன்றுமில்லாமல் நீங்கள் நிற்கும் பொழுது ஒருவர் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
“கடன் அன்பை முறிக்கும்” என்று சும்மாவா சொன்னாங்க..