இந்த நவீன காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது ஒரு சாதாரணமாக ஆகிவிட்டது. ஒரு சிலர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான வருமானம் இல்லாததால் கடன் வாங்கி அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நினைக்கின்றனர். இதனால் பலரும் கடனால் தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு விரைய செலவுகள், எதிர்பாராத சூழ்நிலையில் நடக்கும் விபத்துக்களால் ஏற்படும் செலவுகள் போன்றவற்றால் பணம் நெருக்கடி ஏற்பட்டு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. கடன் வாங்குவது பெரிதல்ல கடனை அடைப்பது தான் பெரிது என்று எல்லார் வீட்டிலும் பெரியோர்கள் போரில் நாம் கேள்விப்பட்டிருப்போம். கடனுக்கு மேல் கடன் வட்டியை அடைக்க கடன் மற்றும் வட்டி மேல் வட்டி இதற்காக கடன் என கடன் கூடிக் கொண்டே தான் போகிறது தவிர கடன் புரியவில்லை என்று பலரும் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த வகையில் நம் வாங்கிய கடனை எளிதில் அடைக்க நன்றாக உழைக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான ஒன்று. ஆனால் நாம் வாங்கிய கடனை எளிதில் அடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் கடனை விரைவாக அடைத்து விடலாம் அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடனை விரைவாக அடைக்க வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் மற்றும் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறோம் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, நான் வாங்கிய கடனை விரைவாக அடைத்து விட வேண்டும் என்று சாமி இடம் வேண்டிக் கொண்டு கையில் வைத்திருக்கும் பழத்தை இரண்டாக கட் பண்ணி தலையில் இருந்து பாதம் வரை பிழிந்து விடவும். நன்றாக தேய்த்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். அதனுடைய தோலை தூக்கி எறிந்து விட வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை இந்த பரிகாரத்தை நாம் செய்து வந்தால் விரைவில் கடன் பிரச்சினைகள் இருந்து வெளியே வர இந்த பரிகாரம் ஒரு தீர்வாகும். கடனை அடைக்க இந்த பரிகாரம் மட்டும் போதுமா என்று கேட்டால் பத்தாது, நாம் முதலில் கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் பிறகு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால்தான் நாம் வாங்கிய கடனை விரைவாக நாம் கட்ட முடியும்.




