
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (35). இவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த கோகிலா திடீரென மாயமானார். இது குறித்து, நேற்று கோகிலாவின் தந்தை நல்லழகு (86) கொடுத்த புகாரின் பேரில், காரையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.