விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டியால் அவதிப்பட்டு வந்த தம்பதிகள் விரத்தி தாங்காது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கந்துவட்டி காரணமாக பாதிக்கப்பட்ட தம்பதிகள் தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தம்பதிகள் கூறுகையில் “விருதுநகர் பர்மா காலனி பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணவேணி. அவர் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நவீன் என்ற மகன் மற்றும் 19 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் நவீன் கல்லூரியில் கேண்டீன் அமைக்க விழுப்புரம் பகுதியில் சார்ந்த டிஎம்பி பேங்க் மேனேஜர் ராஜு அவரது மனைவி ஜெயந்தியிடம் ரூ.4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையிலும் ரூ. 7 லட்சம் தர வேண்டும் என்று தொந்தரவு செய்யப்பட்டு வந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் தற்போது கந்துவட்டி பிரச்சினையில் பாதிக்கப்பட்டு புகார் அளித்துள்ளனர் ,இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.