
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை மற்றும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இன்று (22.02.2025) “பெற்றோர்களை கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்த விழாவானது கடலூர் மாவட்டம் திருப்பயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தொடங்கியது. மேலும், “இவ்விழாவில் 132 தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து” வைத்தார்.
இதனை தொடர்ந்து, “தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின், இந்த 7 வது மாநாட்டை சிறப்பிக்கும் வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட ‘APPA’ என்ற செயலியையும் திறந்து” வைத்தார். இதையடுத்து, APPA செயலி எப்படி செயல்படும் என்ற காணொளி காட்சி பதிவு ஒன்று திரையிடப்பட்டது. மேலும்,”இந்த செயலியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயன்தரும் வகையில் பதிவுகள் வெளியிடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், “இந்த செயலியால் தமிழ்நாட்டில் 46,000 அரசு பள்ளி மாணவர்கள், 12,000 சி.பி.எஸ்.சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.