• September 24, 2023

கடலூர் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண் – மணமகன் வீட்டார்கள் கொந்தளிப்பு..!!

கடலூரில் பரபரப்பு – மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண் – கொந்தளிப்பில் மணமகன் வீட்டார்.!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்தத் திருமணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். இதையடுத்து, நேற்று காலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகத் தீவிரமாக நடைபெற்ற நிலையில், மணப்பெண் திடீரென மாயமானார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும், கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மணப்பெண் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி பின்னர் மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து குறித்த மூகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறவினர் பெண் ஒருவரிடம் பேசி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Previous

இனிப்பு போளி செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

Read Next

மாம்பழ மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular