கடல் பாசியை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் அதிசய நன்மைகள் என்ன தெரியுமா..??

Oplus_131072

கடல்பாசி எந்தவகையான உப்பு நீரிலும் மற்றும் நன்னீரிலும் வளரக் கூடியது. இது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவரமாகும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் , ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் பி 6 தவிர வைட்டமின்கள் கே, ஏ, சி மற்றும் ஈ ஆகியவையும் காணப்படுகிறது.

குறிப்பாக இது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகின்றது. இதனை உணவில் சேர்ப்பது இன்னும் நன்மையே தரும்.

அந்தவகையில் கடற்பாசியால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும்.

கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.

கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும்.

கடல் பாசியை உங்களுடைய வழக்கமாக உணவோடு சேர்த்து தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டு வரும்போது நார்ச்சத்துக்கள் நிறைந்த டயட்டாக மாறிவிடும். இது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் எடை கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும்.

கடல் பாசி வயிற்றில் உள்ள என்சைம்களை முறையாகத் தூண்டி, வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தும், கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வயிறை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.

கடல் பாசி உடலில் உண்டாகும் ஆக்சிடேட்டிவ் சேதத்தால் உண்டாகும் பிரச்சினைகளைச் சரிசெய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.

Read Previous

ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்று கூறப்படும் சுரைக்காயில் உள்ள நன்மைகள்..!!

Read Next

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular