ஜூலை 17ம் தேதி அன்று டெல்லி விமான நிலையத்தின் உணவகம் ஒன்றில் முதியவர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது மயங்கி கீழே விழுந்தார்,
அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவரை தண்ணி தெளித்து எழுப்பியும் அவர் எழவில்லை, அந்த விமான நிலையத்தில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஓடி வந்து அவருக்கு முதல் உதவி தந்து அவர் கண்விழிக்கும் வரை அவரோடு பேச்சிக் கொடுத்துக் கொண்டும் இருந்தார், முதியவர் மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு அங்கு இருந்த அனைவரும் மருத்துவரை பாராட்டி வந்தார்கள், சம்பவம் இணையதளத்தில் வீடியோவாக பகிரப்பட்டு இணையதள வாசிகள் பெண் மருத்துவரை புகழ்ந்து வருகிறார்கள்..