
நாம் சாமி கும்பிடும் போது பல வேண்டுதல்களை நாம் சாமியிடம் சொல்லுவோம். இந்நிலையில் கடவுள் நம்மளை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை நாம் எவ்வாறு அறிவோம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சாமி கும்பிடும் பொழுது உங்களை அறியாமல் கண்ணீர் வந்தால் உங்கள் வேண்டுதலுக்கு பலன் உண்டு. கடவுளிடம் உங்கள் வேண்டுதலை சொல்லி முறையிடும்போது பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனம். உங்கள் விருப்பப்படி அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்ற உறுதியை கோயிலுக்குள் அல்லது வெளியில் நீங்கள் சாமி கும்பிடும் பொழுது பச்சிளம் குழந்தை அழுதால் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அர்த்தம். கோயிலில் உங்கள் வேண்டுதலை வைக்கும் பது கோயில் மணி அடித்தால் உங்கள் வேண்டுதலுக்கு நிறைய பலன் கிடைக்கும். தீப ஆராதனை செய்யும் போது கண்களை ஒருபோதும் மூடிக்கொள்ள கூடாது கண்களைத் திறந்து கடவுளிடம் தன்னை மறந்து வேண்டுதல் செய்ய வேண்டும்.