• September 14, 2024

கடுமையான உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?..

வாழ்க்கையில் பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதனால் தாய்மையடைவதும் தள்ளிப்போகிறது. தங்களுக்கு குழந்தை இல்லையே என்று மனங்கலங்குவது, மன அழுத்தத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. சிகிச்சைக்கு பின்பும் தாய்மையடையாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி, கூடுதல் மனக்குழப்பத்தை தருகிறது. தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது பெண்கள் பதற்றமாக இருந்தால், கருக்குழாயில் உள்ள தசைகள் இறுக்கமாகி விடும். இது, கரு தரிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

கரு முட்டை வளர்ச்சி குறித்த பரிசோதனை, கரு முட்டை வெளியேறுவதற்கு போடப்படும் ஊசி போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தம்பதிகள் மன அழுத்தம் இல்லாமல் இயல்பாக உறவை மேற்கொள்வது தாய்மைக்கு மிக அவசியம். பெண்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்ய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இதில் இருக்கும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி என்பது மனித உடலுக்கு கட்டாயம் தேவைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். கடுமையான உடற்பயிற்சி என்பது ஆணுக்கு ஆண் மைத் தன்மையையும், பெண்ணுக்கு பெண்மைத் தன்மையையும் குறைக்கவே செய்யும். மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்யும் ஆண்களிடம் இருக்கும் பாலுணர்வு வேட்கை பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் ‘மெடிசின் அன்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அன்ட் எக்ஸசைஸ்’ துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.

அதில் கடுமையான உடற்பயிற்சி, பாலுணர்வு வேட் கையை குறைப்பதாக கண்டறிந்து அறிவித்திருக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த களைப்பை ஏற்படுத்துகிறது. அந்த களைப்பு பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனின் அளவைக் குறைத்துவிடுகிறது என்கிறார்கள்.

Read Previous

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: இதுவரை 6 பெண்கள் உயிரிழப்பு..!!

Read Next

Optical Illusion | ஐந்து நொடிக்குள் வித்தியாசமான எழுத்தை முடிந்தால் கண்டுபிடியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular