• September 29, 2023

கடைகளில் அதிகாரிகள் சோதனை..!! பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சுகாதார மேற்பார் வையாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கேசி ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்க ளிலும் சோதனை நடத்தினர்.

அதன்படி தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்திய, வைத்திருந்த, விற்பனை செய்த கடைகள், உணவகங்கள் உள்பட பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்

Read Previous

போலி பாஸ் மூலம் மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்-டிரைவர் கைது..!!

Read Next

குற்றாலத்தில் அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular