திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள்…
ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் கொஞ்ச நாளைக்கு நல்ல வாழலாம்….
ஆனால் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டாங்க. உங்களிடம் பேசுவதற்கு கூட விரும்பமாட்டார்கள். ரொம்ப கொடுமையா இருக்கும்.
உங்கள் கணவன் அல்லது மனைவி மட்டுமே இருப்பார். இதுக்காகவா திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள். ஆனால் இதுக்காகவாது திருமணம் செய்து கொள்ளுங்கள். உடம்பில் ஆரோக்கியம் இருக்கிறவரைக்கும் தான் இந்த தனிமையில் வாழறதுக்கு தைரியம் இருக்கும்.
முதுமை வந்து நடைகள் தளரும் போது தான் யோசிப்பிங்க நமக்கென்று ஒருவள்/ ஒருவன் தாங்கி செல்ல இருந்திருக்கலாமோ என்று. அப்போ தேடினாலும் யாரும் வர மாட்டாங்க.
இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்துவிட்டேன்.
தவிச்ச வாய்க்கு தண்ணி தர யாரும் இருக்க மாட்டாங்க….
ஒருவேளை சோற்றுக்கு கூட உறவுக்காரர்களை நம்பித்தான் இருக்க வேண்டும்….
எவ்ளோ தான் நீங்க காசு வச்சிருந்தாலும் பார்க்க வருகிறவர்கள் உங்க காசுக்காக மட்டுமே வருவார்கள்.
உங்களிடம் காசு இல்லை என்றால் அவர்களும் வருவதை நிறுத்தி விடுவார்கள்…
கடைசி காலத்தில் நீங்கள் இறக்கும் போது உங்களிடம் பணம் இருந்தால் உங்களை நல்லடக்கம் செய்வார்கள்..
உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் ஒரு அனாதை பிணம் தான்.
அதனால் நல்ல துணையை தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.