கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன்னுடைய மகனுக்கு, அங்கே இருக்கும் தனியார் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடம் வழங்க கோரி கடந்த 2022ம் ஆண்டு விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால் அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டார் சுற்றளவுக்கு அப்பால் இருப்பதாக சொல்லி நிராகரித்தனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா முக்கிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பள்ளி இருப்பிடம் தொலைவு குறித்த விதிகள் கட்டாயம் இல்லை என தெரிவித்தார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட தொலைவுக்கு அப்பால் உள்ளவர்களையும் சேர்க்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மனுதாரரின் மகனுக்கு  3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Previous

வாட்ஸ் அப் பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வீடியோ காலிலேயே ஆடியோவை ஷேர் செய்யலாம்..!!

Read Next

ரேஷன் கடைகளில் இனி ‘இதுவும்’ கிடைக்கும் – அரசின் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular