திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் தேர் பட்டி கிராமத்தில் வசித்து வரும் நபர் சிவகுமார் (வயது 38). இவர் கட்டிட தொழிலாளி. அப்பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரை அவ்வப்போது தன்னுடன் கட்டிட வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.
இதனிடையே சிறுமியுடன் நெருக்கம் காண்பித்த சிவகுமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியுடன் தனிமையில் நெருங்கி பலாத்காரம் செய்து உள்ளார். ஒரு சமயத்தில் விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரிய வரவே அவர் மகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு வேறொரு இடத்தில் வீடு பார்த்து குடியேறினார்.
அங்கும் சிவகுமார் வந்து பழகி உள்ளார். இந்நிலையில் சிறுமி வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்து உள்ளனர்.