கட்டிலில் இருந்து தவறி விழுந்து, 23 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு நடந்த சோகம்..!! பெற்றோர்களே கவனம்..!!

சிறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு நெஞ்சைபாபக்கும் சம்பவம் தான் நடந்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சித்தாத்தாகுறிச்சி வடக்கு தெருவில் வசித்து வருபவர் கருவேலமுத்து, இவரின் மனைவி கருவேலங்கனி. கர்ப்பமாக இருந்த கருவேலங்கணிக்கு கடந்த 23 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.

பிரசவத்திற்காக பெண்மணி மீனாட்சி பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். நேற்று மாலை நேரத்தில் குழந்தை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென விழிப்பு வந்து உருண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.மேலும் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

குடும்பச்சண்டையால் விபரீதம்..!! எலி மருந்து கொடுத்ததில் குழந்தை பலி..!! தாய் உயிர் ஊசல்..!!

Read Next

நண்பர்களுடன் இன்பசுற்றுலா, இறுதிசுற்றுலாவான சோகம்..!! மென்பொறியாளருக்கு நேர்ந்த பரிதாபம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular