கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள வியக்க வைக்கும் புரிதல்..!! இளநீர் வியாபாரி செய்த உதவி..!! படித்ததில் ரசித்தது..!!

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி.

வாகன வசதி இல்லாத காலம் அது.

கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.

ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார் என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள்.

மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான்.

இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு.

தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.

அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.

இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான்.

எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.

இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான்.

ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

இளநீர் கணவன் கைக்கு வந்தது.

அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள்.

அதோடு என் குழந்தையை சுமக்கிறாள்.

இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.

இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார்.

கணவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.

நீ என் மனைவி.

என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கணவன்.

இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.

இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே..

என்ன பிரச்சனை என்றாலும்
கணவன் மனைவிக்குள்
விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது..
படித்ததில் ரசித்தது🥰

Read Previous

கணவன் இல்லை என்றால் மனைவி விதவை தான்..!! ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு அனாதை தான்..!!

Read Next

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்…‌!! கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular