கணவன் – மனைவிக்குள் சண்டை வர காரணமாக இருப்பவையும், அதற்கான தீர்வும்..!!

 

ஏன் தம்பதிகள் சண்டையிடுகின்றனர்? இந்த கேள்விக்கான பதிலை அழகாக விளக்கவிருக்கிறது இந்த சிறப்பு பதிவு.

மோதல் உள்ள இடத்தில் தான் காதல் இருக்கும் என்பார்கள்.

எப்போதுமே கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனவே ஒவ்வொரு முறையும் நினைப்பர். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சண்டைகள் நம் வாழ்வில் தொடர்கதை ஆகிவிடுகின்றன.

எனினும், ஒரு சில விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளும்போது, தேவையற்ற சண்டைகளை தவிர்க்கலாம். அவை என்னவென்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

புரிதல் இல்லாமல் போதல்

சொல்ல வரும் விஷயத்தை குறித்த புரிதல் இல்லாமல் போகும்போது தம்பதியினருக்கு இடையே சண்டை வருகிறது.

இருவருக்கும் இடையே வேறுபட்ட கருத்து காணப்படும். இதனால், யார் சொல்வதை யார் கேட்பது என்ற சண்டை வரலாம்.

இந்த மாதிரியான சூழலில், கணவர் என்பவர் மனைவி சொல்ல வருவதையும், மனைவி என்பவர் கணவர் சொல்ல வருவதையும் புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இருவருமே எதற்காக அந்த விஷயம் சொல்லப்படுகிறது என்பதை புரிந்துக்கொண்டாலே போதும். நிச்சயம், யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வர்.

பொய் சொல்லுதல்

பொய் என்பது கொஞ்ச காலத்திற்கு உங்களை காப்பாற்றலாம். ஆனால், உண்மை தெரிய வரும்போது, அது மிகப்பெரிய விரிசலை தம்பதியினரின் உறவுக்கு இடையே ஏற்படுத்தலாம்.

ஒருசிலர் அடிக்கடி பொய் பேசுவர். இதனால், அப்போதைக்கு அவர்களால் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியும். ஆனால், உண்மை தெரியும்போது, சமாளிக்கவே முடியாது.

பொய் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதனை மனம் உணரும்.

எப்போதும் தம்பதியினர்கள் உண்மையை மட்டுமே பேசி வரும்போது, உறவு வலுவடையும். பொய் பேசுவதால், நம் மீதான நம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.

சிறப்பை உணராமல் இருத்தல்

எப்போதுமே கணவன் – மனைவிக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது பிறந்தநாள் அல்லது திருமண நாள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த மாதிரியான சூழலில் நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சிலர் வேலைப்பளு காரணமாக இது போன்ற சிறந்த தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், வாழ்த்து கூற மறந்தும் போய்விடுவார்கள்.

ஒரு சிறு நிகழ்வு கூட தம்பதியினருக்கு இடையே மோசமாக உணர வைக்கும். உடனே, முக்கியத்துவத்தை ஆராய தொடங்கிவிடுவோம். அதனால், நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இது போன்ற நாட்களை கொண்டாட மறக்காமல் இருப்பது நல்லது.

கவனம் செலுத்துதல்
தம்பதிகள் எப்போதுமே ஒருவருக்கொருவர் பேசுவதை கவனிக்க வேண்டும். நாம் அவ்வாறு கவனிப்பது, ‘நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்.’ என்பதை வெளிப்படுத்தக்கூடிய விதமாகும்.

கவனிக்காமல் போகும்போது, ஒரு வித தனிமையை உணர நேரிடும். இதனால் சண்டை மற்றும் சச்சரவு உண்டாக வாய்ப்புள்ளது.

ஒரு சில சமயம் தம்பதியினர் இடையே சந்தேக புத்தி உண்டாகும். சந்தேகம் வந்துவிட்டால், அது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

இவை தம்பதியினருக்கு இடையே சண்டை வர சில சமயங்களில் காரணமாகிறது.

இந்த தலைப்பு குறித்து நீங்கள் நினைப்பது என்ன?

நீங்கள் உங்கள் கணவரிடம் எப்படி அன்பை வெளிப்படுத்துவீர்கள்?

உங்கள் இருவருக்கும் இடையே சண்டை வருமா?

அப்படி சண்டை வரும்போது என்ன யுக்தியை பயன்படுத்துவீர்கள்?

சிந்தித்து செயல்படுங்கள்

#கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு
மவுனம் மட்டும் தான்..
கணவன் சத்தம் உயரும் போது மனைவி மவுனமாகவும்
மனைவி சத்தம் உயரும் போது
கணவன் மவுனமாகவும்
இருந்துவிட்டால் சண்டை சத்தம் இல்லாமல் போய்விடும்…
இரண்டு பேருமே சத்தம் போட்டுக் கொண்டு இருந்தால் சண்டை பெரிதாகும் சத்தம் வீட்டுக்கு வெளியே போகும் மூன்றாவது நபர் உள்ள வருவார்கள் ….
சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல உங்களுடைய சண்டையை பெரிதாக்கி அவர்கள் குளிர் காய்வார்கள்…
யாரோ ஒருவர் மௌனம் காத்து விட்டால் மூன்றாவது நபர் வருபதற்க்கு இடமில்லை..
மூன்றாம் நபர் உள்ளே வந்து
எத்தனையோ குடும்பம் சீரழிந்து போயிருக்கு … நீங்களும் அறிவீர்கள்…
குடும்பம் என்பது ஒரு ரயில் போன்று
கணவனும் மனைவியும் தான் தண்டவாளம் ..
குழந்தைகள் என்னும் ரயில் விபத்து இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் தண்டவாளம் சரியாக இருக்க வேண்டும்.,. தண்டவாளம் சரியாக அமைந்து விட்டால் ரயில்கள் சுமூகமாக பயணிக்கும்….
தண்டவாளத்தில் விரிசல் காரணமாக எத்தனையோ ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது..
அந்த மாதிரி விபத்துக்கு நீங்க காரணமாக இருக்காதீர்கள்
கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால்
குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள்..

#உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் “மனைவி” மட்டும்தான்.
நீங்கள் பாசத்தை அள்ளி வீசி வளர்த்த உங்கள் பிள்ளைச் செல்வங்கள் பெருத்து ஆளாகி திருமணம் முடித்ததும் உங்களை விட்டும் தூரமாகிவிடலாம். ஊர்விட்டுச் செல்லலாம், நாடு துறந்தும் போகலாம்.
நீங்கள் ஒரு காலம் ஆனந்தமாக உறவாடிய அன்பான சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பம் என்று பிஸியாகி விடுவார்கள்.
இறுதி காலத்தில் கைபிடிக்க சகோதரனும் வரமாட்டான், கண்ணீர் விட சகோதரியும் வர மாட்டாள். எல்லோரும் அவரவர் வாழ்வென்று பிரிந்து செல்வார்கள்.
உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் என யாருமே என்றும் கூடவே இருக்க வரமாட்டார்கள்.
இந்த உலகம் அவர்களை உங்களிடமிருந்த பலவந்தமாக பிரித்தெடுத்துக்கொள்ளும்.
வாழ்வென்னும் ரயில் பயணத்தில் உங்களோடு இடைநடுவில் கடைபிடித்து ஏறிக்கொண்ட உங்கள் பாச மனைவிதான் உங்களோடு கூடவே இருக்கப் போகிறாள்.
நீங்கள் என்றும் சாய்ந்திருக்க அவள் புயம் மாத்திரமே உங்களுக்காக காத்திருக்கும்.
நீங்கள்
நோய்வாய்ப்படும் போது…
முதுமை அடையும் போது…
துக்க துயரங்களில் பங்கெடுக்க…
ஆத்திர அவசரம் என்று வரும் போது…
என்றும் உங்களை தாங்கும் ஊன்றுகோல்
ஆதலால் உங்கள் உறவுக்கு உரமூட்டுங்கள்.
நீங்கள் பரஸ்பரம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அனாதரவாக மரணிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்.

 

Read Previous

விளக்கில் மீதமாகும் பழைய எண்ணெய் மற்றும் திரியை மீண்டும் பயன்படுத்தலாமா..?? பூக்களைக் கொண்டு தீபத்தைக் குளிர வைக்கலாமா..??

Read Next

ஆணுறுப்பு கட்டுக்கடங்காத வீரியம் அடைய, உடலில் இரும்பு சத்து கிடைக்க, நரம்புகள் முறுக்கு ஏற.. இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular