கணவன், மனைவியாக சேர்ந்து மது அருந்தினால் இவ்வளவு நன்மைகளா.!! ஆய்வின் முடிவில் வெளியான தகவல்.!!

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்தில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும்  மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றன. ஆல்கஹால் உடலில் செல்வதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பலவிதமான மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து மது அருந்தும்போது கணவன் மனைவிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வானது மது குடிப்பதை ஊக்குவிப்பதற்காக இல்லை, அதற்கு மாறாக தம்பதிகளுக்கு இடையே ஆன ஒரே மாதிரியான பழக்கங்களை பகிர்ந்து கொள்வதை குறித்து கூறி வருகிறது. கடந்த 20 ஆண்டு காலங்களாக 4,500 ஜோடிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொண்ட பட்ட இந்த ஆய்வில் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை குறிப்பாக மது பழக்கத்தை கொண்டுள்ள தம்பதியர்களுக்கு இடையில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு  முடிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தம்பதியர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பொழுது நீண்ட நாட்கள் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் உயிர் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சிகள் தெரிய வந்தது. இந்த ஆராய்ச்சி “குடி கூட்டு கோட்பாடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவர் மட்டுமே குடிப்பழக்கத்தை கொண்டவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான ஆற்றல்கள் நிலையில் உள்ளது.

அவர்களின் திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாமலும் இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய டாக்டர் பிரிட்டி என்பவர் ஒன்றாக மது அருந்தும் தம்பதியினர் மற்ற தம்பதியினர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.

Read Previous

தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்..!! இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்..!!

Read Next

தண்டுக் கீரையின் தனித்துவ நற்பண்புகள்.!! சிறுநீரகம், கல்லீரலுக்கு நல்லது.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular