இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி வாழ்க்கை என்பது சில நாட்கள் மட்டுமே தொடர்கிறது ஏதோ ஒரு காரணத்திற்காக இருவரும் பிரிந்து வாழ்வது இன்றைய காலகட்டத்தில் நிதர்சனமாக நடக்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றி நாம் காண்போம்..
கணவன் மனைவி இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் தன்மை வேண்டும் சண்டை வரும்போது யாராவது ஒருவர் விட்டு தருவதன் மூலம் சண்டைகள் நீடிக்காமல் சமாதானங்கள் தொடங்கும், அதேபோல் புதுமையான விஷயங்கள் செய்யும் போது கணவன் மனைவி இருவருக்குள்ளும் பாராட்டுதல் வேண்டும் ஒருவரை ஒருவர் பாராட்டிடும் பொழுது அந்த உறவு இன்னும் இனிதாக மாறும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்க கூடாது யாரும் யாரையும் ஈகோ பார்க்க கூடாது முடிந்தவரை மன்னிப்பு கேட்டு அந்த குழந்தைகளுக்கு அப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும், மேலும் வாழ்க்கை அஸ்திவாரமே இந்த நம்பிக்கைதான் இது இல்லை என்றால் சந்தோஷம் இருக்காது. ஒருவர் மேல் ஒருவருக்கு அளவுக்கதிகமான நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அந்த உறவில் தவறு நடப்பது மிக கடினம் தான் இது எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை அன்பாகவும் இனிமையாகவும் சிறந்த பயணமாக மாறும் உங்கள் திருமண வாழ்வில் இந்த வழிமுறைகளை பின்பற்றும் பொழுது உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக மாறும், கணவன் மனைவிக்கு தேவையான ஆதாயங்கள் விட்டுக் கொடுக்கும் தன்மை, பாராட்டுதல், மன்னிப்பு கேட்கும் குணம், நம்பிக்கை, இவை அனைத்தும் ஒரு திருமண வாழ்வை அழகாகவே மாற்றும்..!!




