இன்றைய காலகட்டத்தில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் என பலரும் தங்களது குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விவாகரத்து செய்து வருகின்றன, தற்சமயம் நடந்து முடிந்த ஆய்வில் விவாகரத்து அதிகம் நடப்பதாக தெரியவந்துள்ளது மேலும் குடும்ப வாழ்வை அழகாக மேம்படுத்துவதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தலாம்..
மனைவி பேசும்போது முழு கவனம் கொடுக்க வேண்டும் கணவன்மார்கள், அதேபோல் செல்போனை பார்த்து கொண்டே மனைவியிடம் பேசாதீர்கள் அது மனைவியை கஷ்டப்படுத்தும், மேலும் செல்போனை தூர வைத்து அவர்களிடம் அன்பாக சிரித்து பேசுங்கள் தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள் அவரோடு அவர் உங்களுக்கு செய்யும் பணிவிடைகளை பற்றி பெருமிதமாக பேசுங்கள், அதேபோல் மனைவி பேசும் பொழுது குறுக்கே பேசாதீர்கள் கவனியுங்கள் மேலும் நீங்கள் கவனிக்கும் போது ம்ம்ம் என்று சொல்லலாம் அப்பொழுது உங்கள் மனைவிக்கு உங்கள் மீது மதிப்பு கூடும், இதே போல் அவர்கள் பேசும்போது வேறு எங்கோ பராக்கு பார்ப்பது அலட்சியமாக இருப்பது இது போன்றவை தவிர்க்கவும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் மனைவிக்கு உங்கள் மீது அன்பும் அபிப்பிராயமும் அதிகமாகும்..!!




