சுக்காலியூர் அருகே கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து.
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள ஏ சி பி கார்டனை சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 26. இவரது மனைவி சுசீலா.
இவர்கள் இருவரும் ஜூலை 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், சுக்காலியூர் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து அன்னை மெஸ் அருகே சென்ற போது,
அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், அண்ணாதுரை ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இதனால் நிலை தடுமாறி டூவீலரிலிருந்து கீழே விழுந்த கணவன்- மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது மனைவி சுசிலாவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அண்ணாதுரை கரூர் நாச்சிமுத்து மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எது? அதை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.