கணவன் மற்றும் மனைவி கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

கணவன் மற்றும் மனைவி கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

 

தகராறு இல்லாத குடும்பம் இல்லை…

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..

 

யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை

இருந்தால், அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.

 

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்,

பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.

 

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு.

பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.

 

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.

சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுவதும் உண்டு

 

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு

பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

 

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் துன்பப் படுவது போலவும் பிரமை வேண்டாம்.

 

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சனையோடு வரக் கூடாது

மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது.

 

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது.

மனைவி எதையும் இடித்து பேச கூடாது

 

“நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் ” என்று மனைவி சொன்னால் “எந்த நாய் சொன்னது?” என்ற கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை.. தன் தவறை ஒத்துக் கொண்டு .”சரி இனி பார்த்து வாங்குகின்றேன்” என்று சொல்லி விட்டால் முடிந்தது.

 

“நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால்,

“எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்ற மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.

 

“இன்னிக்கு உடம்புக்கு முடியல நாளைக்கு நன்றாக சமைக்கின்றேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.

 

மனைவி புது புடவை உடுத்தினால் ….”இந்த புடவை நன்றாக இருக்கு…. அழகா இருக்கே” என்று சொல்லணும் .

 

கணவன் வெளியிலிருந்து வரும் போது “ஏன் இப்படி வியர்த்திருகிறது. எளச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

 

மனைவியைக் கணவன் “அம்மா” என்று அழைக்கணும்

கணவனை மனைவி “அப்பா” என்று அழைக்கணும்.

 

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி

தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

 

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.

 

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்

சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.

 

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விசயம் வார்த்தைகளில் எச்சரிக்கை.

 

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்…

சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

 

முள்ளால குத்தின காயம் ஆறிடும்

சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.

 

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

 

இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..

ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

 

“பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள்” என்றும் “கணவன் தானே பேசட்டும்” என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது உடல் வலிக்காது.. ஊர் சிரிக்காது..

Read Previous

ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படியொரு பிள்ளை இருக்கும்..!! உண்மை பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular