கணவரின் கண்ணில் கத்தரிக்கோலால் குத்திய மனைவி..!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. மொபைல் போனுக்காக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் தனது கணவரை கத்தரிகோலால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட அங்கித், தனது மனைவி பிரியங்காவிடம், யூடியூப்பில் பாடல்களைக் கேட்க மொபைல் போன் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, கத்தரிக்கோலால் அங்கித்தின் கண்ணில் குத்தினார். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அங்கித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read Previous

பெண் பலாத்காரம்.. போலீஸ் எஸ்பி, டிசிபி டிரைவர்கள் கைது..!!

Read Next

மண்பானையில் சாதம் வடித்து சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular