உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும் அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும், மனங்களும் மனிதர்களும் தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்ள வருகிறார்…
அந்த வகையில் கணவனை பிரிந்து வேதனைப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விவரிக்கிறார். ஒரு நபர் இந்தியாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வந்தார். இரண்டு மனைவிகளும் குழந்தைகள் இருந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள மனைவிக்கு தெரியாமல் கன்னடாவில் உள்ள மனைவியையும் கனடாவில் உள்ள மனைவிக்கு தெரியாமல் இந்தியாவில் உள்ள மனைவியும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து குடும்பங்களை நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த நபரின் இரண்டு மனைவிகளும் இந்த விஷயம் தெரிய வர மாறி மாறி கணவர் மீது கேஸ் போட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். கனடாவில் சட்டங்கள் கடுமையாக இருந்ததால் அங்குள்ள மனைவியிடம் அந்த நபர் சொத்துக்களை இழக்க நேர்ந்தது. சிறை செல்லும் அளவிற்கு அவரின் நிலை மோசமானது மனைவிகளுடான விவாகரத்துக்கள் வழக்குகள் அந்த நபரை சோகத்தில் ஆழ்த்தி தற்கொலை செய்ய முயற்சித்ததோடு சிறை செல்லாமல் இருக்க வழக்கறிஞரை வைத்து ஒரு பக்கம் போராடி வருகிறார். இந்த சூழலில் அவருடன் விவாகரத்து பெற்ற இந்தியாவை சேர்ந்த பின் தான் ஒருவேளை அவருடன் இருந்திருந்தால் வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்க மாட்டார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்ற என்னத்துடனும் திருமணத்தால் ஏற்பட்ட வலியுடனும் இருந்தார். அதோடு தனக்கிருந்த வழிகளை குழந்தையிடம் கோபமாக அடிக்கடி காட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அந்தப் பெண் என்னை சந்திக்க வந்து நடந்ததை கூறினார் முதலில் நான் அந்த பெண்ணிடம் உங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த சிறந்த தோழிகள் பெயர் தெரியுமா என்று கேட்டேன் அதற்கு அவர் தெரியும் என்றார் பின்பு அவர்கள் முதல் சந்திப்பு பற்றியும் சிறந்த நல்ல நினைவுகள் குறித்தும் கேட்டேன் ஓரளவிற்கு மேல் அவர் பதில் கூறவில்லை தொடர்ந்து முதலில் சம்பளம் வாங்கியது போன்ற சிறந்த தருணங்களை பற்றி கேட்டேன் அதற்கு அந்த பெண் பதிலளிக்காமல் இருந்தார். பொதுவாக மனிதர்களுக்கு நல்ல நினைவுகளை விட வலி நிறைந்த நினைவுகள் தான் ஞாபகத்தில் இருக்கும் உதாரணத்திற்கு என்னிடம் கவுன்சிலிங் வந்த பெண்ணும் சிறந்த தருணங்களை சுருக்கி விட்டு தேவையற்ற முடிந்து போன நினைவுகளை பெரிதாக்கி தனக்குத்தானே கஷ்டப்பட்டார். அந்த வழிகளை அவர் மறக்க நீங்கள் தனிப்பட்ட முறையில் விவாகரத்திற்கு பிறகு அடைந்த உயரங்கள் என்னவென்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் பெரிய உயரங்கள் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பிரிந்து வாழ்ந்து இத்தனை வருடங்களில் புதிதாக என்ன படித்தீர்கள் என்ன ஸ்கில் டெவலப் செய்தீர்கள் பொருளாதார ரீதியில் எவ்வளவு உயரம் தொட்டீர்கள்? உடல் நலன் சார்ந்து என்ன செய்தீர்கள். இப்படி கேள்விகள் கேட்டபோது புதிதாக அந்த பெண் எதையுமே செய்யாமல் இருந்தது தெரிந்தது அதன் பின் நான் அவரிடம் பழைய வழிகள் நீங்க கண்டிப்பாக புதிய உயரங்களை தொட்டாக வேண்டும் இல்லை என்றால் நிச்சயம் அந்த வலிகளில் இருந்து வெளியே வர முடியாது. ஒரு நபர் தொழிலில் நூறு கோடி இழந்தால் ஆயிரம் கோடி சம்பாதித்த பிறகு தான் அந்த இழப்பை பற்றி சிரித்து பேச முடியும் அதை விட்டுவிட்டு அவர் வெறும் 10 கோடி சம்பாதித்தால் இழப்பை நினைத்து வருத்தப்பட தான் செய்ய வேண்டும். புதிய உயரங்களை தொடும்போது இயல்பாகவே வலிகள் போய்விடும் என்றேன். தொடர்ந்து நான் அந்த பெண்ணிடம் இன்னும் 10 வருடத்திற்கு பிறகு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நீங்கள் பெரியாளாகி விட்டால் நான் உங்களிடம் நடந்த இந்த கவுன்சிலிங் பற்றி கேட்டால் என்ன சொல்வீர்கள் என்றேன். இந்த கேள்விக்கு அந்தப் பெண் மூன்று வருடங்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பில் அவன் எத்தனை கல்யாண வேணும்னா பண்ணிட்டு போகட்டும் சார் அத பத்தி ஏன் கேக்குறீங்க என்று சிரித்தபடி பதிலளித்தார். அந்த அளவிற்கு அவர் அப்போது உயரத்தை தொட்டிருந்தார் என்றார்..!!