கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம்..!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, கணவர் வீட்டின் முன்பாக வைத்து தகனம் செய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புவனேஸ்வரி என்ற பெண், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், புவனேஸ்வரியின் தற்கொலைக்கு அவரது கணவர் பழனிராஜ் தான் காரணம் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.