உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்ட பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். காதலனும் கைவிட்ட நிலையில் தனது கணவருக்கு துரோகம் செய்துவிட்டோம் என்று எண்ணி மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் பகுதியை சார்ந்த பெண் வர்ஷா ராணி (வயது 25) இவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வர்ஷாவிற்கு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பெண்மணி தனுடன் பணியாற்றி வந்த நபரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் விருப்பத்திற்காக மற்றொருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.
பிடிக்காத நபருடன் வாழ விருப்பமில்லாத அந்த பெண்மணி தனது கணவரை விட்டு காதலருடன் ஓட்டம் பிடித்தார். இதனிடைய காதலரும் பெண்ணை பயன்படுத்தி கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த அந்த பெண்மணி கணவருக்கு துரோகம் செய்துவிட்டோம் என்று எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின் தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் முன்னாள் காதலுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.