ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவர் முதலில் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மீண்டும் குழந்தை வேண்டும் என்று பாண்டண்ணாவுக்கு ஆசை ஏற்பட்டது. தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என 2வது மனைவி மறுத்ததால், பாண்டண்ணவுக்கு முதல் இரண்டு மனைவிகள் சேர்ந்து, தாங்களாக முன்வந்து 3வது திருமணம் செய்து வைத்துள்ளனர்.