கணினி கீ-போர்டில் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?.. இதோ விளக்கம்..!!
கணினியில் குறிப்பாக F மற்றும் J பட்டனில் இருக்கும் 2 கோடுகளை பெரும்பாலானோர் கவனித்திருக்க மாட்டார்கள். மற்ற பட்டன்களில் இல்லாமல் இந்த பட்டன்களில் மட்டும் ஏன் கீழ் கோடு உள்ளது என்பது பற்றி பார்க்கலாம். இங்கே விரல்களை வைப்பதன் மூலம் உங்கள் இடது கை A, S, D மற்றும் F ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே சமயம், வலது கை J, K, L மற்றும் (;) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நேரத்தில் இரண்டு கட்டை விரல்களும் ஸ்பேஸ் பாரில் இருக்கும். இதன் மூலம் நீங்கள் வேகமாக கீபோர்டை பார்க்காமல் டைப் செய்யலாம்.