
- கண்களில் இருக்கும் கருவளையத்தை போக்க புதினா இலையை கசக்கி சாறு எடுத்து அதை கண்களுக்கு கீழ் தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் விட்டு அதன் பின் கழுவினால் சில நிமிடங்களில் மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை கண்களுக்கு கீழ் தடவுவதால் கருவளையத்தை போக்க முடியும். இதற்கு உருளைக்கிழங்கை அரைத்து ஒரு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளலாம்.
கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்ரைசர் கண்களுக்கு கீழே இருக்கும் வளையத்தை போக்க இது உதவுகிறது.
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இதை கண்களுக்கு, தடவினால் கருவளையம் காணாமல் போகும்.
இந்த தக்காளி சாறை சிறிது துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கண்களுக்கு கீழ் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு, அன்றாடம் செய்தால் ஒரு வாரத்தில் உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் காணாமல் போகும்.
வெள்ளரிக்காய் பல்வேறு சரும பிரச்சனைகளை நீக்கும். இதை உள்ளுக்கு சாப்பிடுவதும் நல்லது.
கண்களில் வெள்ளரிக்காயை சிறிது துண்டாக வெட்டி கண்களை மூடிக்கொண்டு வைத்திருந்து, விட்டு பின் பத்து நிமிடங்கள் கழித்து கழுவுவதால் கருவளையம் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.