கண்களுக்கு கீழே கருவளையம் மேற்பட்டால் இவற்றை செய்ய வேண்டும் இவற்றை செய்வதன் மூலம் கண்கள் ஆரோக்கியமாகவும் கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கியும் கண்கள் அழகாகவும் இருக்கும்…
தூக்கம் இல்லாமல் இருந்தால் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும் எனவே போதுமான அளவு தூங்கினால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் ஏற்படாது மேலும் ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ண வேண்டும் குறிப்பாக பீன்ஸ் வெள்ளரிக்காய் கீரை வகைகள் தக்காளி தர்பூசணி ஆகியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும், நீர் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்தினால் கண்கள் ஆரோக்கியமாகவும் கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் நீங்கியும் கண்கள் அழகாகவும் இருக்கும், மேலும் இரவு நேரங்களில் கண்களுக்கு வெளிச்சங்கள் தராமல் கண்களுக்கு ஓய்வு தந்தால் கண்கள் பிரகாசமாகவும் மற்றும் கண்கள் புத்துணர்ச்சியாகவும் செயல்படும்..!!