
கண்கள் சிவந்து போனால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??
ஒரு சிலருக்கு நீண்ட நேரம் தூங்கினால் கண்கள் சிவந்தவாறு இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நேரம் அழுதால் கண்கள் சிவந்தவாறு இருக்கும். ஒரு சிலருக்கு ஏதாவது அலர்ஜி மற்றும் தூசி பட்டால் கண்கள் உடனே சிவந்து விடும் கூடவே வலியும் ஏற்படும். இந்நிலையில் கண்கள் சிவந்து போனால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கண்கள் சிவந்து போனால் வலியும் ஏற்படும் அப்படி வலி ஏற்படும் போது கண்டிப்பாக வெதுவெதுப்பான நீரில் கைகுட்டியை நனைத்து கண்களுக்கு பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து பிறகு குளிர்ந்த நீரில் கைகுட்டியை நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்தால் வழி குறைந்து சோர்வு நீங்கி கண்கள் பால் போல வெண்மையாகவும் இருக்கும்.