
கண்கள் பளிங்கு போல் மின்ன கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க..!!
ஒரு மனிதருக்கு கண் மற்றும் கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு சிலருக்கு கண்கள் அழகாக இருக்கும். அந்தக் கண்கள் பளிங்கு போல் மின்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உங்களுடைய கண்கள் பளிங்கு போல் மின்னுவதற்கு தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால் போதும். உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும். மற்றும் நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். இளமையை தக்க வைக்க தண்ணீர் சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து சுருக்கம் மற்றும் சரும வறட்சி போன்றவற்றை தடுத்து எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது.