பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று குவித்துள்ளது…
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது, இந்த பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக 10 நாட்கள் நடந்தது, மேலும் நேற்று இரவு உடன் பாரா ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது, இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மற்றும் பல நாடுகள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்களை பெற்று சிறப்பித்துள்ளது, மேலும் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது, மேலும் இந்தியா 18வது இடத்தை பிடித்துள்ளது, கடந்த ஆண்டு 19 பதக்கங்களை வென்று 24-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியா 18வது இடத்தை பிடித்து சிறப்பித்துள்ளது, மேலும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்..!!




