கண்ணாடி பேழையில் கருப்பு கண்ணாடியுடன் விஜயகாந்த் உடல்..!! கதறித்துடிக்கும் பிரேமலதா, லட்சக்கணக்கான தொண்டர்கள்.!!

நடிகரும் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அலர்ஜி காரணமாய் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தன் 71 வயதில் அவர் இயற்கை எய்தி உள்ளார். அவரின் மரணத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வேட்டி .சட்டை ,கருப்பு கண்ணாடி, தேமுதிக துண்டு ஆகியவை அணிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலை தூக்கி செல்லும்போது விஜயகாந்தின் மனைவி மற்றும் இலட்சக்கணக்கான தொண்டர்கள் கதறி துடித்தனர். இன்னும் சற்று நேரத்தில் கட்சி அலுவலகத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read Previous

கட்டில் உறவில் ஏற்படும் சில மன கசப்பான செயல்கள்..!!

Read Next

#Breaking: மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை..!! முதலமைச்சர் நேரில் அஞ்சலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular