கண் உஷ்ணம் குறைய மற்றும் கண்ணில் ஏற்படும் எரிச்சல் குணமாக வேண்டுமா இதை அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!!

இரவு நேரத்தில் கண் தூக்கமின்மையால் அவதிப்படும் பொழுது கண் எரிச்சல் ஏற்படுவது கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இதோ தீர்வு..

சிறிதளவு புளியங்கொட்டை தூளை, பசும்பாலில் கலந்து குடித்து வர கண் எரிச்சல் குறையும், நெருஞ்சி இலை அருகம்புல் தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும், முசுமுசுக்கை இலை சாரோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும், அகத்திக்கீரை சாறு எடுத்து அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்து தேங்காய் பால் கலந்து குடித்தால் கண் எரிச்சல் குறையும், பாதிரி மரத்தின் வேரை காய வைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும், கோவையில் கசாயம் குடித்து வர கண் எரிச்சல் குறையும், அகத்தி இலை எடுத்து நன்கரைத்து சாறு பிழிந்து அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து நன்கு வேக வைத்து பிறகு தேங்காய் பால் சேர்த்து கலக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும், பொடி பசலை கீரை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும், விரிஞ்சில் செடியை பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல் குறையும்,வில்வ இலைகளை சத்தியில் போட்டு வதக்கி தூங்க செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேல் வைத்து கட்டி விட வேண்டும் மறுநாள் காலையில் அவிழ்த்து விட வேண்டும் இவ்வாறு கண் எரிச்சல் குறையும் வரை செய்ய வேண்டும், கருங்காலி மர இலைகளை ரோஜா இதழ் சேர்த்து கண்களில் ஒத்தடம் கொடுக்க கண்ணெரிச்சல் குறையும், அதிமதுரம் கடுக்காய் திப்பிலி மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை தேன் கலந்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் சரியாகும், நாவல் பழத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் இருப்பிடம் எரிச்சல் நீர் வடிதல் ஆகிய நோய்கள் குறையும், திருநீற்றுப்பச்சிலை சாரி கண்ணின் மேல் தடவ கண் எரிச்சல் குறையும், பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணையும் பாலும் விட்டு மிளகு போட்டு சிவக்க காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்…!!

Read Previous

அடிக்கடி உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா உடனடி தீர்வாக இதோ : இனி கவலை வேண்டாம்..!!

Read Next

கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்கள் தமிழக அரசு பெருமிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular