கண் கலங்க வைக்கும் வெங்காயம்..!! இனி வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணீரே வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்கள்..!!

அனைத்து வகையான சமையல்களிலும் முக்கிய மூலப் பொருளாக இருப்பது வெங்காயம். எந்த ஊர் சமையல் என்றாலும் கட்டாயம் அதில் வெங்காயம் இடம் பிடித்து விடும். சட்டினி வகைகள், குழம்பு வகைகள், கிரேவிக்கள், பிரியாணி வகைகள் என அனைத்திலும் வெங்காயம் மிக முக்கியமான ஒன்று.

அதிலும் ஒவ்வொரு ரெசிப்பிக்கும் வெங்காயத்தை ஒவ்வொரு விதமாக நறுக்க வேண்டி வரும்.‌ பிரியாணி போன்ற உணவுகளுக்கு நீளவாக்கில் நறுக்க வேண்டும். குழம்பு வகைகளுக்கு சதுர வடிவத்தில் பொடியாக நறுக்க வேண்டும். வடை போன்ற உணவுகளுக்கு இன்னும் பொடி பொடியாக நறுக்குதல் வேண்டும். வெங்காயத்தை பஜ்ஜி போட வேண்டும் என்றால் அதனை வட்ட வடிவில் நறுக்கி பயன்படுத்துவார்கள். இப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு விதமாக நறுக்கும் இந்த வெங்காயத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கலே இதை நறுக்கும் பொழுது கண்களில் வரும் கண்ணீர் தான்.

வெங்காயம் நறுக்கும்பொழுது அந்த வெங்காயத்தில் இருந்து வெளியாகும் ஒருவித அமிலம் காற்றில் கலந்து கண்களை அடையும் பொழுது கண்களில் கண்ணீர் வர வைக்கும். எனவே பலருக்கும் சமையல் செய்ய பிடித்தாலும் வெங்காயம் நறுக்குவது என்றாலே அலர்ஜியை போன்று இருக்கும். இப்படி வெங்காயம் நறுக்க பிடிக்காதவர்கள் கண்ணீரே வராமல் எப்படி வெங்காயம் நறுக்கலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம்.

1.வெங்காயம் நறுக்குவதற்கு முன்பாக 15 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து அதன் பிறகு எடுத்து பயன்படுத்தினால் வெங்காயம் நறுக்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தடுக்கலாம்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் வெங்காயத்தை அதில் போட்டு அதன் பிறகு நறுக்கவும். உப்பு வெங்காயத்தில் இருந்து வெளிப்படும் அமிலத்தின் தன்மையை சற்று குறைத்திருக்கும் இதனால் கண்ணீர் ஏற்படுவது குறையும்.

3. வெங்காயத்தை தண்ணீருக்கு அடியில் வைத்து நறுக்குவது அதாவது தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அடிப்பகுதியில் வைத்து வெங்காயம் நறுக்கினால் கண்களில் எரிச்சல் ஏற்படாது.

4. வெங்காயம் நறுக்கும் பொழுது வாயில் சுவிங் கம் போல எதையாவது மென்று கொண்டே வெங்காயம் நறுக்கினாலும் கண்ணீர் வராது என்று கூறுவார்கள்.

5. ஒரு மெழுகுவர்த்தி ஒன்றை வெங்காயம் நறுக்கும் பொழுது அருகில் பற்ற வைத்து வைத்திருந்தால் வெங்காயத்திலிருந்து வெளிப்படும் வேதிப்பொருள் எரிக்கப்பட்டு விடும் இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படாது.

6. எப்பொழுதும் வெங்காயத்தை நல்ல கூர்மையான கத்திகளை கொண்டு நறுக்க வேண்டும் கத்தியின் கூர்மை தன்மையால் அதிக அளவு அமிலங்கள் வெளிவந்து காற்றில் கலப்பது குறைபடும்.

7. வெங்காயம் நறுக்கும் பொழுது மின்விசிறியை ஓட விட்டுக் கொண்டே நறுக்கலாம். இதனால் அமிலம் காற்றில் கலந்து விடும் கண்களை வந்து அடையாது.

8. வெங்காயத்தை நான்காக நறுக்கி ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு நறுக்கலாம் வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் வெளியாகி இருக்கும் அதன் பிறகு நறுக்குவதால் கண்கள் எரியாது.

இந்த டிப்ஸ்களை ஃபாலோ செஞ்சு வெங்காயம் நறுக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருவதை தடுத்திடுங்க. உங்க சமையல்ல கூடுதல் வெங்காயத்தை சேர்த்து சமையலுக்கு சுவை கூட்டிடுங்கள்.

Read Previous

3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! உறவினரே கொன்றது அம்பலம்..!!

Read Next

மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular