கண் திருஷ்டி நீங்க வேண்டும் என்றால் பொதுவாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில பழக்கத்தை எல்லாம் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில், வரவேற்பு அறையில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைப்பார்கள். அதாவது வருபவர்களின் முகம் நேராக அந்த கண்ணாடியில் படுமாறு மாட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டியை நாம் எளிதாக குறைக்க முடியும். மேலும் கண் திருஷ்டி நீங்க வீட்டில் மீன்களை வளர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக மீன் தொட்டியில் கருப்பு, சிவப்பு, மீன்களை வளர்ப்பதன் மூலம் கண் திருஷ்டியை நாம் போக்க முடியும்.
மேலும், ஆரத்தி எடுப்பதன் மூலமும் கண் திருஷ்டியை குறைக்க முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். குங்குமம் கலந்த நீரில் வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றிற்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் அதிகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரம் ஒரு முறை கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் கண் திருஷ்டியை எளிதாக போக்கலாம். இருவேளை சாம்பிராணி பொடியுடன் கருவேலம் பட்டை பொடி, வெண் கடுகு தூள் கலந்து தீப புகை காட்டுவதன் மூலமும் நம் வீட்டில் உள்ள கண் திருஷ்டியை எளிதாக போக்க முடியும். மேலும் வீட்டில் நுழைவாயிலில் கண் திருஷ்டி கணபதி படம் வைப்பதன் மூலம் கண் திருஷ்டியை குறைக்கலாம். எலுமிச்சம் பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமம் மற்றும் மற்றொரு பகுதியில் மஞ்சள் தடவையும் வீட்டின் நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கும் நமக்கும் உள்ள கண் திருஷ்டியை எளிதாக போக்க முடியும். மக்களே கண் திருஷ்டியை போக்க இதையெல்லாம் கடைபிடித்து பாருங்கள்.