கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

 

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆன்மீக ரீதியான இந்த கல் உப்பில் வெள்ளிக்கிழமைகளில் கல்லுப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும், சமையலறையில் ஒரு ஜாடியில் கல் உப்பை கொட்டி வைக்க வேண்டும் என்றும் அது சற்றும் குறையாமல் நிறைந்தவரே இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். மேலும் அட்சய திருதியை என்று தங்க நகை வாங்க வசதி இல்லாதவர்கள் கல்லுப்பு வாங்கினாலே அதிக பலன் தரும் என்றும் கூறுவார்கள். கல் உப்பு என்பது செல்வ வளம் பெருக்கும் ஒரு பொருளாகும். வெள்ளிக்கிழமைகளில் இந்த கல்லுப்பைக் கொண்டு தீபம் ஏற்றினால் அந்தக் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட்டு வற்றாத பணவரவு ஒரு பித்தளை அல்லது தாமிர தாம்பல தட்டில் கல் உப்பை நிரப்பி அதன் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ ஊற்றி, பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் மகாலட்சுமி தாயார் மனம் வந்து செல்வத்தை பெருக்கச் செய்வார் என்பது ஐதீகம். இவ்வாறு செய்வதால் பதவி உயர்வு குடும்பத்தில் அதிகமான செல்வ செழிப்பு போன்றவை ஏற்படுமாம். மேலும், கல் உப்பு எதிர்மறை சக்திகளின் விலக்கி நேர்மறை சக்திகளை உண்டாக்கும் சக்தி இதற்கு வீட்டின் நுழைவாயிலில் கதவிற்கு பின்புறம் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் நான்கு திசைகளை பார்த்தவாறு நான்கு வரமிளகாய் வைத்தால் அது கண் திருஷ்டியை போக்கு மாம். பின்பு இதை ஒரு வாரம் கழித்து காகிதத்தில் போட்டு கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். மீண்டும் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக கல்லுப்பை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வம் உண்டாகுமாம். மேலும் வாரம் ஒரு முறையாவது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கல் உப்பை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை உட்கார வைத்து ஒன்பது முறை அவர்களின் தலையைச் சுற்றி அந்த தண்ணீரை வாஷ்பேஷனில் கொட்டி விட்டால் கண் திருஷ்டி முழுவதுமாக நீங்கி விடுமாம்.

Read Previous

முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா..? கெட்டதா..?

Read Next

நீண்ட நாள் வாழ ஆசையா? அப்போ இத கட்டாயமா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular